உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நியூ பிரின்ஸ் பள்ளிகள் பிளஸ் 2வில் முழு தேர்ச்சி

நியூ பிரின்ஸ் பள்ளிகள் பிளஸ் 2வில் முழு தேர்ச்சி

சென்னை, சென்னை, உள்ளகரம் மற்றும் ஆதம்பாக்கம் நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 2024 - 2025ம் ஆண்டு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 227 மாணவ - மாணவியரும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.உள்ளகரம் நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 104 மாணவ - மாணவியர் முழு தேர்ச்சி பெற்றனர்.இதில் மாணவி கே.யுதிகா, 600க்கு 592 மதிப்பெண் எடுத்து, பள்ளியில் முதலிடம் பெற்றார். ஏ.ஆண்டனி பிரேட்வின் என்ற மாணவன், 577 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடமும், பி.பாலாஜி என்ற மாணவன் 576 மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடமும் பிடித்தனர்.தேர்வு எழுதிய மாணவர்களில், கணினி அறிவியல் பாடத்தில் எட்டு பேர், கணிதத்தில் இரண்டு பேர் சென்டம் எடுத்தனர்.ஆதம்பாக்கம்ஆதம்பாக்கம் நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 123 மாணவ - மாணவியரும், முழு தேர்ச்சி பெற்றனர்.இப்பள்ளியின் எல்.விஜயலட்சுமி என்ற மாணவி 589 மதிப்பெண் எடுத்து, முதலிடம் பெற்றார். ஜி.ஜே.சுஹானா, வி.பிரியா, பி.ஸ்ருதி ஆகியோர் 575; வினிஷா வைஷ்ணவ் 566 மதிப்பெண் பெற்று, அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.கணினி அறிவியல் பாடத்தில் 10 பேர், வணிகத்தில் இரண்டு பேர், கணக்கியல் மற்றும் கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில் தலா ஒரு மாணவர்கள் சென்டம் பெற்றனர்.தேர்வில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியரை, நியூ பிரின்ஸ் கல்விக் குழுமத்தின் தலைவர் லோகநாதன், செயலர் மகாலட்சுமி, முதல்வர் அமுதா உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி