சென்னை: வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 15,000 சதுர அடியில், டைல்ஸ் மற்றும் குளியலறை சாதனங்கள் விற்பனைக்கான 'டைல் ஹவுஸ்' நிறுவனத்தின் புதிய ஷோரும் நேற்று திறக்கப்பட்டது. வடசென்னையில், 30 ஆண்டுகளுக்கு மேலாக டைல்ஸ் விற்பனையில் ஈடுபட்டுள்ள, 'டை ல் ஹவுஸ்' நிறுவனம், வடபழனி, மடிப்பாக்கம், செங்குன்றம், புழல் என, பல இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவையை அளித்து வருகிறது. புதிதாக, வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம், வள்ளலார் நகர் மணிகூண்டு அருகே, 15,000 சதுர அடியில், பிரமாண்ட ஷோரூமை அமைத்துள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. உரிமையாளர்கள் சுரேந்திர், சுதாகர் ஆகியோர் தலைமை வகித்தனர். அவர்களின் தாயாரும், டைல் ஹவுஸ் நிறுவனர் சந்திரபோஸின் மனைவியுமான உத்தரைகுமாரி, புதிய ஷோரூமை திறந்து வைத்தார். குளியலறை சாதனங்களுக்கான தனிப்பிரிவை, ஜான்சன் டைல்ஸ் நிறுவன துணை தலைவர் பி.ஜெகநாதன், ஜான்சன் டைல்ஸ் நிறுவன குளியலறை பிரிவு பொதுமேலாளர் ஜோசப் ஏ.லுாயிஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில், கவுன்சிலர்கள் வேளாங்கண்ணி, விஜயலட்சுமி மற்றும் நிறுவனத்தினர், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.