உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தியேட்டரில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் பலி

தியேட்டரில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் பலி

திருப்போரூர், மந்தைவெளியைச் சேர்ந்தவர் மெல்வின், 29; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, ஒரு மாதத்திற்கு முன், காயத்ரி என்பவருடன் திருமணம் நடந்தது.நேற்று முன்தினம் புதுமண தம்பதி, சிறுசேரி அருகே ஏகாட்டூர் தனியார் மாலில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க சென்றுள்ளனர்.நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, மெல்வினுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரிய வந்தது.கேளம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ