உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை பொருள் வழக்கில் நைஜீரியர் கைது 

போதை பொருள் வழக்கில் நைஜீரியர் கைது 

பரங்கிமலை, சென்னை, ஆலந்துார் மெட்ரோ ரயில் வாகன நிறுத்தம் அருகே, மெத் ஆம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்த, ஷெனாய் நகரை சேர்ந்த, முன்னாள் டி.ஜி.பி.,யின் மகன் அருண் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, 5 கிராம் மெத் ஆம்பெட்டமைன், ஒரு லட்சம் ரூபாய், நான்கு மொபைல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த, நைஜீரியாவை சேர்ந்த ஒனுஹாசுக்வு, 38, என்பவரை தேடி வந்தனர். பெங்களூருவில் பதுங்கியிருந்த அவரை, தனிப்படை போலீசார் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை