மேலும் செய்திகள்
2வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
06-May-2025
பைக் மீது கார் மோதி லாரி உரிமையாளர் பலி
05-May-2025
கொடுங்கையூர் :ஜார்க்கண்ட் மாநிலம், கிராம் பிஹியா பகுதியைச் சேர்ந்தவர் திரேந்திர குமார், 27. இவர், கொடுங்கையூர், எத்திராஜ் சாலையில் தங்கி, கொடுங்கையூர் குப்பைமேடில் ஒப்பந்த அடிப்படையில், குப்பை தரம் பிரிக்கும் வேலை செய்து வந்தார்.நேற்று அதீத குடிபோதையில் இருந்த திரேந்திர குமார், வீட்டின் 2வது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்ததில், தலையில் படுகாயமடைந்தார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
06-May-2025
05-May-2025