உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எண்ணெய் கசிவு விவகாரம்: அரசு விளக்கம் தீர்ப்பாயத்தில் அரசு தரப்பில் விளக்கம்

எண்ணெய் கசிவு விவகாரம்: அரசு விளக்கம் தீர்ப்பாயத்தில் அரசு தரப்பில் விளக்கம்

சென்னை, சென்னையில், கடந்த டிச., 4ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, மழைநீரில் கலந்த கச்சா எண்ணெய் கழிவுகள் பகிங்ஹாம் கால்வாய், எண்ணுார் கடல் பகுதிக்கு பரவியது. இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்ததாவது:சி.பி.சி.எல்., நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிந்தது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. எண்ணெய் கசிவுக்கு முன்பிருந்த நிலையை கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'எண்ணெய் கசிவு விவகாரத்தில் சி.பி.சி.எல்., தவிர மற்ற நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை வரும் பிப்., 27ல் நடக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ