உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓ.எம்.ஆர். -- இ.சி.ஆரில் மீட்கப்பட்ட இடங்களில் வேலி

ஓ.எம்.ஆர். -- இ.சி.ஆரில் மீட்கப்பட்ட இடங்களில் வேலி

சென்னை,சென்னை மாவட்டம், சோழிங்கநல்லுார் தாலுகாவிற்கு உட்பட்ட, ஓ.எம்.ஆர். காரப்பாக்கத்தில், அரசுக்கு சொந்தமான, 20 சென்ட் இடம், வருவாய்த் துறையால் மீட்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு, 8 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.அதேபோல், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, 6 சென்ட் இடம், பள்ளிக்கரணையில் மீட்கப்பட்டது. மேலும், இ.சி.ஆர். கொட்டிவாக்கத்தில் 85 சென்ட் அரசு தரிசு இடம் மீட்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு, 30 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.மீட்கப்பட்ட இடங்கள் மீண்டும் ஆக்கிரமிப்பில் சிக்காமல் இருக்க, சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில், சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்படுகிறது.மேலும், ஒவ்வொரு இடத்திலும் அதன் வருவாய் புல எண்களை குறிப்பிட்டு, 'தமிழக அரசு வருவாய்த் துறைக்கு சொந்தமானது. அத்துமீறி நுழைவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ