| ADDED : ஜன 24, 2024 12:39 AM
சென்னை, ஹிந்து கோவில்களை சுத்தம் செய்யும் நமசிவாய உழவாரப்படை, 2002 முதல் தமிழகம் முழுதும் உழவாரப் பணியை மேற்கொண்டு வருகிறது. முதல் உழவாரப் பணியை சென்னை நெடுங்குன்றத்திலும், 190வது பணியை ராமேஸ்வரத்திலும், 209வது பணியை தென்காசியிலும், 239வது பணியை காசியிலும், 244வது பணியை ராமேஸ்வரத்திலும், கடந்தாண்டு 248வது பணியை சிதம்பரம் கோவிலிலும் நடத்தியது.வரும் ஜன., 28ம் தேதி ஞாயிறன்று, 258வது மாத பணியை திருவண்ணாமலை அருணாச்சலஸ்வரர் கோவிலில் செய்கிறது.காலை 9:00 மணிக்கு கோவில் உட்பிரகாரம், சுற்றுப்பிரகாரம் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணி, அமுது செய்வித்தல், அறக்கொடியோன் திருக்கையிலாய வாத்தியக் குழுவின் இசையுடன் கூட்டு வழிபாடு என, மாலை 5:00 மணி வரை நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை, ஏ.வேணுகோபால் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.இப்பணியில் பங்கேற்க விரும்புவோர் 98402 04639 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.