உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 35 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது

35 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது

புழல் :வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 35 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். புழல் அருகே ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், புழல் கட்டபொம்மன் தெருவில், புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் பிளாஸ்டிக் பண்டலில் சுற்றி வைக்கப்பட்டிருந்த, 35 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பதுக்கிய முகமது அலி ஜின்னா, 50 என்பவரை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, சில தினங்களுக்கு முன், கஞ்சா பண்டல்களை வீட்டின் முன் யாரோ வைத்து விட்டு சென்றதாக கூறினார். இதையடுத்து, 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், முகமது அலி ஜின்னாவை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை