உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாரம் சரிந்து விழுந்து விபத்து ஒருவர் காயம்; 3 கார் சேதம்

சாரம் சரிந்து விழுந்து விபத்து ஒருவர் காயம்; 3 கார் சேதம்

சென்னை:மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில், 'டவுளானி டவர்ஸ்' என்ற வணிக வளாக கட்டடம் உள்ளது. இங்கு துணி, கண்ணாடி உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.இங்கு, கடந்த ஒரு வாரமாக புனரமைப்பு பணி நடக்கிறது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த சாரம், நேற்று மாலை திடீரென சரிந்து விழுந்தது.அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்ற லாயிட்ஸ் காலனியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் காயமடைந்தார். மேலும், மூன்று கார்கள் சேதமடைந்தன. விபத்து குறித்து மயிலாப்பூர் போலீசார், ஒப்பந்ததாரர் மற்றும் கட்டட உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து மாநகராட்சி பெண் பொறியாளரிடம் கேட்டபோது, 'எந்தவித அனுமதியின்றி புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளருக்கு 'நோட்டீஸ்' வழங்க, மேல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நோட்டீஸ் வழங்க உள்ளோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !