உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெங்கடேசப் பெருமாளுக்கு புஷ்ப யாகம் கோலாகலம்

வெங்கடேசப் பெருமாளுக்கு புஷ்ப யாகம் கோலாகலம்

சென்னை, தி.நகர், திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் வெங்டேஷ்வர பெருமாளுக்கு இரண்டு டன் மலர்களால், புஷ்பயாகம் விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.திருமலை திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்திற்கு பின், உற்சவருக்கு புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது. அதேமுறையில், சென்னை, தி நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் வெங்கடேஸ்வர பெருமாளுக்கு புஷ்ப யாகம் விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.கடந்த மாதம் பிரம்மோற்சவம் முடிந்த நிலையில், ஐப்பசி திருவோணமான நேற்று புஷ்ப யாகம் நடந்தது. இதனை முன்னிட்டு, காலை ஹோமமும் அதனை தொடர்ந்து திருமஞ்சனமும் நடந்தது. பிற்பகல் புஷ்பயாகம் துவங்கியது.இதில், துளசி, சாமந்தி, மல்லி, கனகாம்பரம், சம்பங்கி, நித்யமல்லி, ஜாதிமுல்லை, மருவு, தவனம், தாமரை, விருச்சி, மனோரஞ்சிதம், செண்பகம், ரோஜா, மகிழம், தாழம்பூ ஆகிய மலர்களால் பெருமாளுக்கு புஷ்ப யாகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வெங்கடேஸ்வர பெருமாளின் அருளைப் பெற்றனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ