உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.57 லட்சத்தில் சிறுவர் பூங்கா திறப்பு

ரூ.57 லட்சத்தில் சிறுவர் பூங்கா திறப்பு

எண்ணுார்:சென்னை, திருவொற்றியூர் மண்டலம் 3வது வார்டில், கவுன்சிலர் மேம்பாட்டு நிதியான, 57 லட்சம் ரூபாய் செலவில், அன்னை சிவகாமி நகர், சிறுவர் பூங்கா கட்டி முடிக்கப்பட்டது.இதன் திறப்பு விழா, நடைபெற்றது. இதில், திருவொற்றியூர், எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தனியரசு, உதவி கமிஷனர் நவேந்திரன், கவுன்சிலர் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்று திறந்து வைத்தனர்.இந்த பூங்காவில், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி பாதை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், தி.மு.க., பகுதி செயலர் அருள்தாசன், கவுன்சிலர் சொக்கலிங்கம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை