வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Thanegaivel Thanegaivel B
டிச 25, 2025 17:06
Why late madavaram bus depot to padiyanallur tool bridge
சென்னை: மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களுக்கு உட்பட்ட புழல் உபரிநீர் கால்வாயின் குறுக்கே, வடபெரும்பாக்கத்தில் 22.41 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார். இந்த பாலம் 190 மீட்டர் நீளம்; 7.5 மீட்டர் அகலம் கொண்டது. 2021ம் ஆண்டு பணிகள் துவங்கிய நிலையில், பல்வேறு காரணங்களால், மேம்பால பணிகள் தாமதமாகின. இது குறித்து, அடிக்கடி நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பணிகள் வேகமெடுத்து மேம்பாலம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், மாதவரம், மணலி பகுதியைச் சேர்ந்த, ஒரு லட்சம் குடியிருப்புவாசிகள் பயன்பெறுவர்.
Why late madavaram bus depot to padiyanallur tool bridge