உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அகர்வால்ஸ் மருத்துவமனையில் ஆப்டோமெட்ரி படிப்பு

அகர்வால்ஸ் மருத்துவமனையில் ஆப்டோமெட்ரி படிப்பு

சென்னை, 'ஆப்டோமெட்ரி' என்ற பார்வை அளவையியல் பிரிவில், இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது.இதுகுறித்து, டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரி முதல்வர் கற்பகம் கூறியதாவது:அடுத்த தலைமுறைக்கான நோயறிதல் கருவிகளை உருவாக்குதல், மருத்துவ பயிற்சியை மேம்படுத்துதல், கண் பராமரிப்பு தீர்வுகளில் புதுமைகளை புகுத்துதல் உள்ளிட்டவற்றில், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் வகையில், வி.ஐ.டி., சென்னையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, பார்வை அளவையியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் இணைந்து செயல்பட முடியும்.இதற்கிடையே, 2025 - 26ம் கல்வியாண்டுக்கான ஆப்டோமெட்ரி படிப்பிற்கான சேர்க்கை துவங்கி உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் சேர, dragarwal.comஎன்ற மின்னஞ்சல் மற்றும் 97890 60444; 94444 44821 என்ற வாட்ஸாப் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை