உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.5 கோடி ஏலச்சீட்டு மோசடி 70க்கும் மேற்பட்டோர் புகார்

ரூ.5 கோடி ஏலச்சீட்டு மோசடி 70க்கும் மேற்பட்டோர் புகார்

அம்பத்துார், அம்பத்துார், சண்முகபுரம், சிவபிரகாசம் நகரைச் சேர்ந்த அரசகுமார், 59, என்பவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அவருடன், 70க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:அம்பத்துார் அடுத்த புதுாரில் இயங்கி வரும் 'நிஷா டெக்ஸ்டைல்ஸ்' மற்றும் ரெடிமேட்ஸ் கடை உரிமையாளர் கமலகண்ணன், 45. இவரது தந்தை துரை என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.அவரது மறைவுக்குப் பின், கமலகண்ணன் 15 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தார். குறைந்தபட்சம் 1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான சீட்டுகள் நடத்தினார். 26 'வாட்ஸாப்' குழுக்கள் வைத்து, ஒவ்வொரு குழுவிலும் 20 பேர் வீதம், 500க்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டு கட்டி வந்தனர். இந்நிலையில், கடந்த டிசம்பரில் கடையை பூட்டிவிட்டு, கமலக்கண்ணன் தலைமறைவாகி விட்டார்.அவர் கையாடல் செய்துள்ள ஏலச்சீட்டின் மொத்த மதிப்பு, 5 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும். அவரிடமிருந்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து வழக்கு பதிந்து, ஆவடி மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை