உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிந்தோடும் கழிவுநீர் தி.நகர் பகுதியில் அவதி

வழிந்தோடும் கழிவுநீர் தி.நகர் பகுதியில் அவதி

வழிந்தோடும் கழிவுநீர் தி.நகர் பகுதியில் அவதி

கோடம்பாக்கம் மண்டலம், தி.நகரில் தாமோதரன் தெரு உள்ளது. இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.இச்சாலையில், உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மேல் மூடியில் இருந்து கழிவுநீர் வெளியேறி, சாலையில் வழிந்தோடி வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கழிவுநீர், சாலையில் குளம் போல் தேங்கி வருகிறது. இதனால், சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது கழிவுநீர் தெறிப்பதால் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து புகார் அளிக்கும் போது, குடிநீர் வாரியம் சார்பில் கழிவுநீர் லாரி வயிலாக அடைப்பு அகற்றப்பட்டது. ஆனால், அடுத்த நாள் மீண்டும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. எனவே, சாலையில் கழிவுநீர் வழிந்தோடும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.- பூமிநாதன், தி.நகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ