உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உலா வரும் பாம்புகளால் புது மைதானத்தில் பீதி

உலா வரும் பாம்புகளால் புது மைதானத்தில் பீதி

சென்னை, ஷெனாய் நகரில், சமீபத்தில் முதல்வர் திறந்து வைத்த புது மைதானத்தில் உலா வரும் பாம்புகளால் பீதி ஏற்பட்டுள்ளது. அண்ணா நகர் மண்டலம், 102வது வார்டு, அமைந்தகரை கஜலட்சுமி காலனியில் 2,652 சதுர பரப்பளவில், 10.56 கோடி ரூபாய் செலவில், கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட உலக தரத்தில் ஐந்து விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டன. இம்மைதானத்திற்கு, 'பாவேந்தர் பாரதிதாசன்' பெயரை சூட்டி, முதல்வர் ஸ்டாலின் கடந்த 26ம் தேதி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். சமீப நாட்களாக, மைதானத்தில் அடிக்கடி பாம்புகள் உலா வருகின்றன. இதனால், பீதி ஏற்பட்டுள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை