உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறந்த நிறுவனங்களிடம் பூங்கா பராமரிப்பு * சட்டசபையில் அமைச்சர் நேரு தகவல்

சிறந்த நிறுவனங்களிடம் பூங்கா பராமரிப்பு * சட்டசபையில் அமைச்சர் நேரு தகவல்

சென்னை, ''சிறந்த நிறுவனங்கள் முன்வந்தால், சென்னை மாநகராட்சி பூங்காக்கள் பராமரிப்பு பணிகள் ஒப்படைக்கப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:தி.மு.க., - கருணாநிதி: வடபழனி சிம்ஸ் மருத்துவமனை அருகில் உள்ள பூங்கா சீரமைப்பு பணிகள், தொகுதி மேம்பாட்டு நிதியில் நடந்து வருகிறது. பூங்காக்களில் கிரிக்கெட் வலை பயிற்சி மையம், கேரம் அறை அமைத்து தரவேண்டும்.அனைத்து பூங்காக்களிலும் தினக்கூலி பணியாளர்கள் வாயிலாக பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுமா?சென்னையில், 130, 135 வார்டு உள்ளிட்ட பல இடங்களில், 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கால்வாய்கள் உள்ளவ. அவை கடுமையான சேதம் அடைந்துள்ளதால், 3, 4 அடி அகலத்தில் கட்டி தரவேண்டும்.அமைச்சர் நேரு: வடபழனியில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும் பூங்கா பராமரிப்பு பணிகள், இம்மாதம் 30ம் தேதியில் முடிய வாய்ப்புள்ளது. சென்னையில், 2021ம் ஆண்டுக்கு முன்வரை, 704 பூங்காக்கள், 610 விளையாட்டு அரங்கங்கள் பயன்பாட்டில் இருந்தன. நான்கு ஆண்டுகளில், 81 கோடி ரூபாய் செலவில், 204 பூங்காக்கள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 24 கோடி ரூபாயில், 307 பூங்காக்கள் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. சென்னையில் தற்போது 908 பூங்காக்கள், 724 விளையாட்டு அரங்குகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், எட்டு கோடி ரூபாயில், 32 பூங்காக்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்தாண்டு, 60 கோடி ரூபாயில், 30 பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், 30 கோடிரூபாயில், 273 பூங்காக்கள் மேம்படுத்தப்பட உள்ளன.சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு முதல்வர் நிறைய நிதி வழங்கி உள்ளார். இதுவரை, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து, பல்வேறு பணிகள் முடிந்துள்ளன. பழைய மழைநீர் வடிகால்கள் திருத்தி அமைக்கப்பட உள்ளது. எம்.எல்.ஏ.,வின் கோரிக்கை அப்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.தி.மு.க., - மயிலை வேலு: மயிலாப்பூர் தொகுதியில் திறக்கப்பட்ட தொல்காப்பியர் பூங்காவின் பராமரிப்பு பணிகள் எப்போது முடியும்?அமைச்சர் நேரு: முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது, 100 கோடி ரூபாயில் தொல்காப்பியர் பூங்காவை உருவாக்கினார். கடந்த 10 ஆண்டுகளாக, எந்த கவனிப்பும் இல்லாமல் இருந்தது. இப்போது அந்த பூங்கா சுற்றுச்சூழல், கல்வி ஆராய்ச்சி நிலையமாக மாற்றப்பட்டு உள்ளது. பூங்கா மேம்பாட்டு பணிகள், 42.40 கோடி ரூபாயில் நடந்து வருகிறது. மே மாதம் 30ம்தேதி பூங்கா பணிகள் நிறைவு பெறும். இதை, முதல்வர் விரைவில் பார்வையிட உள்ளார். நாகேஸ்வரராவ் பூங்கா பணியும் விரைவாக நடந்து வருகிறது. சிறந்த தனியார் நிறுவனங்கள் முன்வந்தால், பூங்கா பராமரிப்பு பணிகள், அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை