உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பட்டா பெயர் மாற்றும் மனுக்கள் தேக்கம்...குளறுபடி!:வருவாய் துறை புதிய திட்டத்தால் சிரமம்

பட்டா பெயர் மாற்றும் மனுக்கள் தேக்கம்...குளறுபடி!:வருவாய் துறை புதிய திட்டத்தால் சிரமம்

சென்னை மாவட்டத்தில், பட்டா பெயர் மாற்றத்தை எளிமையாக்க, 'முதலில் வருவோருக்கு முதலில் சேவை' எனும் திட்டம், வருவாய் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில், நேரடி பட்டா மற்றும் உட்பிரிவு பட்டா ஆகிய இரண்டுக்கும் ஒரே தரவரிசை அளிக்கப்பட்டு உள்ளதால், பட்டா பெயர் மாற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், வங்கிக் கடன், வீடு கட்டுமான வரைபடத்திற்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னை மாவட்டத்தில், 16 தாலுகாக்கள் உள்ளன. இவற்றில், முழு நிலத்திற்கான பட்டா பெயர் மாற்றம் செய்ய, வி.ஏ.ஓ., மற்றும் துணை வட்டாட்சியர் ஒப்புதலுடன் வழங்கப்படுகிறது. இதற்கு, 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.அதேபோல், ஒரு நிலத்தை பகுதி பகுதியாக பிரித்து, வேறு வேறு ஆட்களுக்கு விற்கப்படும் நிலத்திற்கு, உட்பிரிவு அடிப்படையில் பட்டா வழங்கப்படும்.இந்த உட்பிரிவு பட்டா, நில அளவை துணை ஆய்வாளர், நில அளவையர் மற்றும் தாசில்தார் ஒப்புதலுடன் வழங்கப்படுகிறது. இதற்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.வேலைப்பளு மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால், குறுகிய காலத்தில் வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதாக, வருவாய் துறை ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, 30ல் இருந்து 60 நாட்களாக மாற்றப்பட்டது. பின், 45 நாட்களாக குறைக்கப்பட்டது.பட்டா வழங்குவதில் பல்வேறு குறைபாடு இருந்தது. பணம் கொடுப்போருக்கு விரைவாக பட்டா வழங்குவதும், மற்றவர்களின் மனுக்களை கிடப்பில் போடுவதும் என, பல தாலுகாக்களில் தற்போதும் இந்த பிரச்னை நிலவுகிறது.இந்நிலையில், முறைகேடு தடுக்கவும், பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு அளவு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், 'பஸ்ட் இன் பஸ்ட் அவுட்' எனும் 'முதலில் வருவோருக்கு முதலில் சேவை' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதில், நேரடியாக பட்டா பெயர் மாற்றம் மற்றும் உட்பிரிவு அளந்து பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுவது, ஒரே தரவரிசையில் கொண்டுவரப்பட்டு உள்ளது. 'ஆன்லைன்' மனுக்களின் தரவரிசை அடிப்படையில், பட்டா வழங்கும் முறையில், முதலில் வரும் மனுவுக்கு தீர்வு காணப்பட்ட பின், அடுத்த மனுவிற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும். இந்த திட்டத்தில் சிக்கல் இருப்பதாக, பயனர்கள் புகார் கூறுகின்றனர்.அதாவது, நேரடி பட்டா பெயர் மாற்றம் மற்றும் உட்பிரிவு அளந்து பட்டா வழங்குவதை, ஒரே வரிசையில் கொண்டு வந்ததால், நேரடி பட்டா பெயர் மாற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக, அவர்கள் புகார் கூறுகின்றனர். உதாரணமாக, ஒரு தாலுகாவில், உட்பிரிவு அளந்து பட்டா பெயர் மாற்றத்திற்கு வழங்கியவர், 'ஆன்லைன்' மனு எண் - 5, நேரடி பட்டா பெயர் மாற்ற வழங்கியவர் மனு எண் - 6 என பதிவாகும். அப்போது, மனு எண் - 5 முடித்து வைத்த பின் தான், 6வது மனுவை பரிசீலிக்க வேண்டும்.நேரடி பட்டா பெயர் மாற்றம், ஒரே நாளில் முடிந்து விடும். ஆனால், உட்பிரிவு பட்டா வழங்க, பதிவு ஆவணம், முந்தைய ஆவணங்கள் அடிப்படையில் அளவை மேற்கொள்ள வேண்டும். இதற்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்கள் ஆகும்.அதேபோல், வழக்கமான பணிகளை தவிர்த்து தாசில்தார், நில அளவையர், சம்பந்தப்பட்ட நிலத்தில் அளவீடு செய்ய செல்ல வேண்டும். இதனால், பெரும்பாலான உட்பிரிவு பட்டா பெயர் மாற்றம், 10 முதல் 20 நாட்கள் வரை தாமதமாகிறது.மனு வரிசைப்படி பரிசீலிப்பதால், நேரடி பெயர் மாற்றம் கேட்டு விண்ணப்பிப்போரின் மனுக்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், வங்கிக் கடன், வீடு கட்ட வரைபடம் அனுமதி வாங்குவது உள்ளிட்ட தேவைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் முடிக்க முடியாமல், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.மோசடி புகார்கள்சென்னையில் ஒவ்வொரு தாலுகாவிலும், பட்டா மனுக்கள் மட்டும், மாதம் 400 முதல் 600 வரை வருகின்றன. 50 முதல் 100 மனுக்கள் வரும் சிறிய தாலுகாவுக்கு பிரச்னை இல்லை.ஆனால், சென்னை விரிவாக்க அம்பத்துார், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் அதிகம். இத்தாலுகாக்களில் நடந்துள்ள பட்டா மோசடி புகார்களால், உட்பிரிவுடன் பட்டா கேட்கும் மனுக்கள் மீது, கள ஆய்வு செய்யும்போது தீவிர விசாரணை தேவைப்படும். தவறு நடந்தால், நாங்கள் நீதிமன்றத்திற்கு பதில் கூற வேண்டும். இத்திட்டத்தில், நேரடி பட்டா பெயர் மாற்றத்திற்கு ஒரு தரவரிசை எண்ணும், உட்பிரிவு பட்டா வழங்க வேறு தரவரிசை எண்ணும் வழங்கினால், பணி எளிதாக இருக்கும். நிலுவை மனுக்களை உடனுக்குடன் முடிக்க முடியும். பொதுமக்களும் பயனடைவர்.- வருவாய் துறை அதிகாரிகள்மனுக்கள் தேங்கும்முதலில் வருவோருக்கு முதல் சேவை திட்டத்தால், இடைத்தரகர்கள் தலையீடு தடுக்கப்படும்; பணப்புழக்கம் குறையும். அதேநேரம், உட்பிரிவு பட்டா வழங்கும் மனு நிலுவையில் இருந்தால், நேரடி பட்டா பெயர் மாற்றத்திற்கான மனுக்கள் கிடப்பில் போடப்பட்டு, தேங்கும் நிலை உள்ளது. இதனால் வங்கிக் கடன், வீடு கட்டும் பணி காலதாமதம் ஏற்படுகிறது. இத்திட்டத்தில் நேரடி பட்டா வழங்க தனி வரிசை, உட்பிரிவு பட்டாவிற்கு தனி வரிசை வழங்க, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பொதுமக்கள்

கண்துடைப்பு?

சென்னையை பொறுத்தமட்டில், 1980 முதல் 2000ம் ஆண்டு வரை பதிவான பல பத்திரங்களில், மோசடி புகார்கள் உள்ளன. ஒரே சர்வேயில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவு, பட்டா மோசடி, போலி ஆவணங்கள் வாயிலாக பதிவு, வழக்கை மறைத்து பதிவு, இறப்பு சான்றிதழை போலியாக தயாரித்து பத்திரப்பதிவு என, சொத்துப்பதிவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.பத்திரப்பதிவு அலுவலகத்தில், சர்வே எண்ணில் உட்பிரிவு அடிப்படையில் சொத்து பதிவு செய்தால், பட்டா பெயர் மாற்றத்திற்கு தாலுகா அலுவலகம் அனுப்ப வேண்டும். அதே வேளையில், உட்பிரிவு மாற்றாமல் பதிவு செய்தால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்க வேண்டும். ஆனால், சென்னையில் உள்ள பல பத்திரப்பதிவு அலுவலகங்களில், பத்திரப்பதிவுக்கு ஒரு கவனிப்பு' மற்றும் பட்டா பெயர் மாற்ற தனி கவனிப்பு' உள்ளதாக புகார் எழுகிறது. தனி கவனிப்பு வழங்காவிட்டால், பத்திரப்பதிவு மட்டும் செய்துவிட்டு, பட்டா பெயர் மாற்ற தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்புகின்றனர். இதனால், அரசு அறிவிக்கும் புதிய திட்டம், ஏட்டில் மட்டும் தான் உள்ளது. எங்கள் கைக்கு எட்டுவதில்லை என, பொதுமக்கள் குமுறுகின்றனர்.

மோசடிகள் அதிகம்

சென்னையை பொறுத்தமட்டில், 1980 முதல் 2000ம் ஆண்டு வரை பதிவான பல பத்திரங்களில், மோசடி புகார்கள் உள்ளன. ஒரே சர்வேயில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவு, பட்டா மோசடி, போலி ஆவணங்கள் வாயிலாக பதிவு, வழக்கை மறைத்து பதிவு, இறப்பு சான்றிதழை போலியாக தயாரித்து பத்திரப்பதிவு என, சொத்துப்பதிவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

konanki
ஜூன் 18, 2024 00:51

லஞ்சம் கொட்டி அழாம பட்டா சிட்டா ஓரு புண்ணாக்கும் வாங்க முடியாது இந்த திருட்டு டூபாக்கூர் டாஸ்மாக் போதைப்பொருள் கடத்தல் மாடல் திராவிட ஆட்சியில்


manivannan
ஜூன் 17, 2024 13:57

வெற்று விளம்பர திராவிட மாடல் ஆட்சி


Sakthi Vel
ஜூன் 17, 2024 13:39

எவ்வளவு கத்தினாலும் எந்த கவர்மென்ட் காதிலும் ஏறாது,லஞ்சம் வாங்குவதிலே குறியாய் இருக்கிறார்கள்.


Ashanmugam
ஜூன் 17, 2024 12:57

நேர்மையான தார்மீக முறையில் லஞ்சம் தராமல் தமிழகத்தில் "லஞ்சம் ஊக்குவிக்கும் திமுக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் உள்ளவரை சாமானிய மக்கள் பட்டா வாங்க முடியாது. நான் இதுவரைக்கும் 60சி எம் செல் மெயில் அனுப்பியும் இரண்டு மாதமாக செவிடன் காதில் சங்கு ஊதியது போல் தேங்கி நிற்கிறது. இதே திமுக கட்சி ஆட்கள் என்றால் லஞ்சம் தராமல் பட்டா வாங்கி விடுகின்றனர். மற்றவர்கள் லஞ்சம் 10000 கொடுத்தால் உடனடியாக வழங்குகின்றனர். இதுதான் விடியல் ஆட்சியின் மகத்துவம். இதேபோல கடந்த அதிமுக ஆட்சியில் 5000 கேட்டாங்க. ஆனால் நான் லஞ்சம் தராததால் என் மனுவை குப்பையில் போட்டு விட்டார்கள். இதான் பழனி சாமி ஆட்சியின் வன்மை அக்கிரமம் மற்றும் கொடும்மை. ஆக இந்த இரண்டு ஆட்சிகள் தமிழகத்தில் உள்ளவரை லஞ்சம் தராமல் பட்டா கனவில்கூட வாங்கமுடியாது தமிழக மக்களே?


Kannan s
ஜூன் 17, 2024 13:24

100%


Youdube Face
ஜூன் 17, 2024 07:05

இதே நடைமுறை நகராட்சியில் மற்றும் மாநகராட்சிகளின் follow பண்ண வேண்டும் vacant land Tax and plan approval. காலதாமதம் ஆகின்றது அதை கலைய வேண்டும் கொடுப்பதற்கு காலதாமதம் ஆகின்றது கலைய வேண்டும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ