புழுதிவாக்கத்தில் மயில் மீட்பு
புழுதிவாக்கம், புழுதிவாக்கத்தில், வழி தவறி வந்து சுற்றித்திரிந்த மயிலை, தீயணைப்பு துறையினர் மீட்டு, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.வேளச்சேரி அடுத்த புழுதிவாக்கத்தில், சில தினங்களுக்கு முன், மயில் ஒன்று வழி தவறி வந்து, அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. பின், அது பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையின் உள்ளே சென்று, வெளியேற வழி தெரியாமல் தவித்துள்ளது.இதுகுறித்த தகவலின்படி, உடனடியாக அங்கு விரைந்து வந்த மடிப்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், அந்த மயிலை மீட்டு, கிண்டி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.