மேலும் செய்திகள்
கூலித்தொழிலாளியிடம் பணம் பறித்தோர் கைது
31-Jul-2025
சென்னை, மயிலாப்பூர் இளைஞரை மிரட்டி பணம் பறித்த 'கிரைண்டர்' செயலி நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கவுதம், 23. இவர், கடந்த 23ம் தேதி நள்ளிரவு, ஓரினச்சேர்க்கையாளருக்கான டேட்டிங் செயலியான 'கிரைண்டர் ஆப்'பில் பழக்கமானவர் அழைத்ததன் காரணமாக, மயிலாப்பூர் வடக்கு மாடவீதிக்கு சென்றார். அங்கு வந்த நபர், கவுதமை மாங்கொல்லை பகுதி கழிப்பறை அருகே அழைத்துச் சென்றுள்ளார். அப் போது அங்கு வந்த மற்றொரு நபர், இருவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி, ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலியான 'ஜிபே' மூலம் 1,380 ரூபாயை பறித்துள்ளார். இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், அப்படி சொன்னால் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிடுவேன் என மிரட்டி சென்றுள்ளார். இது குறித்து, மயிலாப்பூர் போலீசார் விசாரித்தனர். இதில், மயிலாப்பூர் மாங்கொல்லை கார்டன் பகுதியைச் சேர்ந்த சூர்யா, 19, என்பவர், 'கிரைண்டர்' மொபைல் போன் செயலி வாயிலாக பழகிய கவுதமை வரவழைத்து, முகேஷ், 25, என்பவருடன் சேர்ந்து திட்டமிட்டு பணம் பறித்தது தெரியவந்தது. நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், கத்தி, மொபைல்போனை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சூர்யா மீது, ஆறு வழக்குகளும், முகேஷ் மீது, நான்கு வழக்குகளும் உள்ளன.
31-Jul-2025