உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீன் வாங்க குவிந்த மக்கள் விலையேற்றத்தால் ஏமாற்றம்

மீன் வாங்க குவிந்த மக்கள் விலையேற்றத்தால் ஏமாற்றம்

காசிமேடு:காசிமேடில், சிறிய மீன் வரத்து அதிகம் இருந்தும், விலையேற்றத்தால் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.மீன்பிடி தடைக்காலம் முடிந்து 2வது வாரமான நேற்று, 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின. ஞாயிற்றுக்கிழமையான நேற்று, காசிமேடில் மக்கள் கூட்டம் அலைமோதியது.படகுகளில், சின்ன சங்கரா, வாளை, நெத்திலி உள்ளிட்ட சிறிய ரக மீனே, அதிகளவில் விற்பனைக்கு வந்தன.ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மீன் வரத்து இல்லை; விலை அதிகரித்து காணப்பட்டது. இதனால் மீன் பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.இது குறித்து விசைப்படகு உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: என் படகை, 7.50 லட்சம் ரூபாய் செலவு செய்து, கடலில் தொழிலுக்கு அனுப்பினேன். 10 நாள் தங்கி மீன்பிடித்து வந்துள்ளனர். 5.50 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே மீன் விற்பனையானது. இதனால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது; கடலில் மீன்வளம் இல்லை. அதேநேரம் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. மீனிற்கு நல்ல விலை கிடைத்ததால், வியாபாரிகள் மட்டுமே மகிழ்ச்சியடைந்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.மீன் விலை நிலவரம்வகை கிலோ (ரூ.)வஞ்சிரம் 1,000 - 1,200கறுப்பு வவ்வால் 500 - 600வெள்ளை வவ்வால் 1,200 - 1,300பாறை 400 - 450சீலா 200 - 300சின்ன சங்கரா 200 - 250பெரிய சங்கரா 400 - 600தும்பிலி 200 - 300கனாங்கத்த 250 - 300கடம்பா 350 - 400செருப்பு 250 - 300நெத்திலி 200 - 250வாளை 100 - 150இறால் 300 - 340டைகர் இறால் 1,000 - 1,200நண்டு 300 - 400


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ