சண்டிகர் பல்கலை உ.பி.,யில் திறக்க அனுமதி
சண்டிகர், நாட்டின் முன்னணி பல்கலையில் ஒன்றான சண்டிகர் பல்கலை, தன் புதிய வளாகத்தை உ.பி., மாநிலம் உன்னாவ் பகுதியில் அமைக்கிறது. இதற்காக, அம்மாநில அரசிடம் முன்வைத்தது.இதை பரிசீலித்த உ.பி., மாநில கல்வி அமைச்சர் யோகேந்திர உபாத்யாய், பல்கலை நிறுவுவதற்கான அங்கீகார கடிதத்தை, சண்டிகர் பல்கலை இயக்குனரிடம் ஒப்படைத்தார்.இதுகுறித்து உ.பி., மாநில கல்வி அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் கூறுகையில், ''உன்னாவில், சண்டிகர் பல்கலை வளாகம் அமைப்பதால், மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி, குறைந்த கட்டணத்தில் கிடைக்கும். மாணவர்களால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டி போட முடியும்,” என்றார்.சண்டிகர் பல்கலையின் உன்னாவ் வளாகம், 2025 - 26ம் கல்வி ஆண்டில் இருந்து செயல்படத் துவங்கும். இங்கு, 45க்கும் மேற்பட்ட நவீன தொழில்நுட்பப் படிப்புகள் வழங்கப்பட உள்ளன.