உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  நான்கு தொழிலாளர் சட்டம் ரத்து செய்யக்கோரி மனு 

 நான்கு தொழிலாளர் சட்டம் ரத்து செய்யக்கோரி மனு 

பாரிமுனை: நான்கு தொழிலாளர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகத்தில், மனு அளிக்கப்பட்டது. அதில், விற்பனை ஊக்குவிப்பு ஊழியர்கள் சட்டம், 1976ல் உருவாக்கப்பட்ட சட்டத்தின்படி, ஐந்து ஆண்டுக்கு மேல், பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு, 120 விடுப்பு நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால், புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டத்தில், 30 நாட்கள் ஊதியமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்கள் விடுப்பான, 15 நாட்களில் இருந்து ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டுள்ளன. எனவே, நான்கு தொழிலாளர் குறியீடு சட்டத்தை, ரத்து செய்ய வேண்டும் என, சங்கத்தின் தலைவர் சத்யநாராயணன் தலைமையில், ஐந்து பிரதிநிதிகள், துணை கலெக்டர் வெற்றிகுமரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி