கட்டுமான பணி இடத்தில் போன் திருடியவர் கைது
ஆர்.கே., நகர் ஆர்.கே., நகரில் கட்டுமானம் நடக்கும் இடத்தில், மொபைல் போன்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர். குரோம்பேட்டை, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சரவணன், 29. இவர், கொருக்குப்பேட்டை, கருணாநிதி நகரில், கட்டுமானம் நடக்கும் கட்டடத்தின் பணித்தள இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். நேற்று அவரது அறையில் வைத்திருந்த இரு மொபைல் போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மூவரின் மொபைல் போன்களும் திருடு போயின. இதுகுறித்து, ஆர்.கே., நகர் போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போன்களை திருடி சென்ற தண்டையார்பேட்டை, நெடுஞ்செழியன் நகரை சேர்ந்த ராஜேஷ், 25, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, ஐந்து மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். ஆர்.கே., நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜேஷ் மீது, ஏற்கனவே ஏழு திருட்டு வழக்குகள் உள்ளன.