| ADDED : ஜன 26, 2024 12:43 AM
காசிமேடு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 2,000 விசைப்படகுகள், 7,000 பைபர் படகுகள், 500 கட்டுமரங்களில், 30,000த்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழில் மேற்கொள்கின்றனர். தினமும், 200 டன் மீன் விற்பனைக்கு வருகிறது.காசிமேடு மீன்பிடி துறைமுக கடல் பகுதியில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், மரக்கழிவுகள், தெர்மாகோல் உள்ளிட்ட கழிவுகள் அதிகளவில் மிதக்கின்றன.தொடர்ந்து, கடலில் பிளாஸ்டிக் கழிவுகளும், குப்பையும் அதிகரித்து வருகிறது.காசிமேடு துறைமுகம் போதிய பராமரிப்பில்லாததால், மோசமான நிலையில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, காசிமேடு துறைமுக கடல் பகுதியில் குவிந்துள்ள குப்பையை அகற்ற, துறைமுக பொறுப்புக் கழக நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.