உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ ஓட்டுநரிடம் போலீஸ் ஐ.டி., கார்டு

ஆட்டோ ஓட்டுநரிடம் போலீஸ் ஐ.டி., கார்டு

பூந்தமல்லி, பூந்தமல்லி, கரையான்சாவடி பேருந்து நிறுத்தத்தில், ஆட்டோக்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் நெரிசல் ஏற்படுகிறது.இதையடுத்து, ஆட்டோக்களை பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்து சற்று தள்ளி நிறுத்த, பூந்தமல்லி போலீசார் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.இந்நிலையில், நேற்று பேருந்து நிறுத்தத்தில், போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற ஆட்டோவை, பணியில் இருந்த பெண் போக்குவரத்து போலீஸ்காரர் மடக்கினார்.அப்போது, ஆட்டோ ஓட்டுநர் தன்னிடம் இருந்த தமிழக போலீஸ் அடையாள அட்டையை காண்பித்ததால், பெண் போலீஸ்காரர் ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்தார்.போக்குவரத்து போலீசாரிடம் ஆட்டோ ஓட்டுநர் போலீஸ் அடையாள அட்டையை காண்பித்த வீடியோ, சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி