மேலும் செய்திகள்
வாத்து கடைக்கு மர்ம நபர்கள் தீ
24-Dec-2024
சென்னை, சூளை, வாத்தியார் கந்தப்பிள்ளை தெருவில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் பிரசன்னா, 30.இவர், நேற்று முன்தினம் இரவு, பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார்.அதில், 13ம் தேதி நள்ளிரவு, வங்கியின் அருகே உள்ள ஏ.டி.எம்., மையத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து, பணம் இயந்திரம் என நினைத்து, காசோலை வைப்பு இயந்திரத்தை உடைத்துள்ளனர்.பின், காசோலை மட்டுமே இருந்ததால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பட்டிருந்தது.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஏ.டி.எம்., மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.காசோலை வைப்பு இயந்திரத்திலிருந்த, 4 காசோலை மட்டும் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
24-Dec-2024