மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய எழுத்துத்தேர்வு
1 hour(s) ago
பிராட்வே: தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம், 2ம் நிலை காவலர்களுக்கான 3,644 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான எழுத்துத்தேர்வு, தமிழகம் முழுதும் 45 மையங்களில் நேற்று நடந்தது. பாரதி மகளிர் கல்லுாரியில் தேர்வு எழுத வந்த பெண் தேர்வர்கள் இருவர், சான்றிதழை ஜெராக்ஸ் எடுக்காமல் வந்ததால், தேர்வு எழுத முடியாமல் செய்வதறியாது திகைத்தனர். உடனே அருகில் இருந்த போலீசார் விசாரித்து, தேர்வர்களை தங்கள் போலீஸ் ஜீப்பிலேயே அழைத்து சென்று, ஜெராக்ஸ் எடுத்து கொடுத்து தேர்வுக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல, பாரதி மகளிர் கல்லுாரியில் தேர்வர்கள் வேகமாக அறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியும், சாலைகளை கடக்கவும் காவல் துறையினர் உதவி செய்தனர்.
1 hour(s) ago