உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூக்கார பெண் ஆபாச அர்ச்சனை பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தம்

பூக்கார பெண் ஆபாச அர்ச்சனை பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தம்

ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம், என்.ஜி.ஓ., காலனி பேருந்து நிலையத்தில் இருந்து மேடவாக்கம் நோக்கி, மாநகர பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. ஆதம்பாக்கம், பழண்டியம்மன் கோவில் அருகே வளைவில் திரும்பிய போது, பேருந்தில் ஏறிய ஒருவர், சாலையோரம் பூக்கடையிலிருந்த பூக்களை தள்ளிவிட்டு ஏறியதாக கூறப்படுகிறது.இதனால் கோபமடைந்த கடை உரிமையாளர் உஷா என்பவர், பேருந்து ஓட்டுனரை ஆபாசமாக திட்டி, பேருந்தின் மீது பூக்களை வீசியுள்ளார். பயணியர் மீது பூக்கள் பட்டதால் கூச்சலிட்டுள்ளனர். இதனால், ஓட்டுனர் கீழே இறங்கி தட்டிக் கேட்டுள்ளார். அப்பெண் ஓட்டுனரையும் ஆபாசமாக திட்டியதால், அந்த வழியாக வந்த 10க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த ஆதம்பாக்கம் போலீசார், ஓட்டுனர்களை சமாதானம் செய்து, பேருந்துகளை இயக்க வைத்தனர். அதன், பின் சாலையோரம் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ