வரும் 17ல் அஞ்சல் குறைதீர் முகாம்
சென்னை, கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம், 17ம் தேதி மாலை 4:00 மணிக்கு, சென்னை, தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள தெற்கு கோட்ட, முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேர்முகமாக நடக்கிறது.அஞ்சல் துறை சார்ந்த சேவைகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் குறைகளை, கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு பிரிவின் தலைவர் நேரடியாக விசாரிப்பார். வாடிக்கையாளர்கள் புகார்களை அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர், சென்னை நகர தெற்கு கோட்டத்திற்கு, 16ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.புகார்களை தபால், பதிவு அஞ்சலில் அனுப்பலாம். தனியார் கூரியர் வாயிலாக அனுப்பப்படும் புகார்கள் ஏற்கப்படாது. புகார்கள் அனுப்பும் உறையின் மீது, 'கோட்ட அளவிலான குறை தீர்வு முகாம் - சென்னை நகர தெற்கு கோட்டம்' என்று, குறிப்பிடப்பட வேண்டும்.