உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நள்ளிரவில் 1 மணி நேரம் மின் வெட்டு

நள்ளிரவில் 1 மணி நேரம் மின் வெட்டு

சேலையூர்:சேலையூர் 100 அடி சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டதால், அப்பகுதிமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.தாம்பரம் மின் கோட்டம், சிட்லப்பாக்கம் உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட, சேலையூர் 100 அடி சாலையில் உள்ள ராஜேஸ்வரி நகர், ஸ்ரீராம் நகர் பகுதிகளில் அடிக்கடி இரவில் மின் வெட்டு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணி முதல் 1:00 மணி வரை, மின் வெட்டு ஏற்பட்டது. இதனால், முதியோர், குழந்தைகள் துாக்கமின்றி அவதிப்பட்டனர்.உயர் அதிகாரிகள் தலையிட்டு, அடிக்கடி ஏற்படும் மின் வெட்டு பிரச்னையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை