உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

சென்னை:: கோட்டூர்புரம்: கடந்த மாதம், 31ம் தேதி அவரது வீட்டிற்கு அருகே, 7 சவரன் நகை கிடந்துள்ளது. அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் யாரேனும் தவறவிட்டார்களா என விசாரித்துள்ளார். நகைக்கு யாரும் உரிமை கோராததால், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நகை தவறவிட்டது தொடர்பாக யாரேனும் புகார் கொடுத்துள்ளார்களா என விசாரித்து வந்த நிலையில், கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பிரதீப் ஜான், 29, என்பவர், காவல் நிலையத்திற்கு வந்து நகை தவறவிட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார். நகையில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் என குறிப்பிட்டிருந்ததால் நகை அவருடையது என்பதை போலீசார் உறுதி செய்து, அவரிடம் ஒப்படைத்தனர். தனியார் நிறுவன ஊழியரான சிவகுமாரின் நேர்மையை, போலீசார் வெகுவாக பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை