உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுகாதார ஆய்வாளரை கண்டித்து போராட்டம்

சுகாதார ஆய்வாளரை கண்டித்து போராட்டம்

திருநீர்மலை, தாம்பரம் மாநகராட்சி, ஒன்றாவது மண்டலத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் நேற்று, திருநீர்மலையில் போராட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'சுகாதார ஆய்வாளர் ராஜசிம்மர், எங்களை தரக்குறைவாக பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.தகவலறிந்த மாநகராட்சி நகர்நல அலுவலர் அருளானந்தம், பணியாளர்களுடன் பேச்சு நடத்தினார். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.இதையடுத்து, சுகாதார ஆய்வாளர் ராஜசிம்மர், மூன்றாவது மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை