உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வள்ளீஸ்வரன் தோட்டம் வாரிய குடியிருப்பில் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து மறியல்

வள்ளீஸ்வரன் தோட்டம் வாரிய குடியிருப்பில் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து மறியல்

சென்னை, சென்னை ராஜா அண்ணாமலைபுரம், காமராஜர் சாலையில் வள்ளீஸ்வரன் தோட்டத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 630 குடியிருப்புகள் உள்ளன. நேற்று, 100க்கும் மேற்பட்ட மக்கள் போதுமான குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கு குடியேறினோம். அப்போதிருந்தே குடிநீர் பற்றாக்குறையாக தான் இருந்தது. கடந்த, 10 நாட்களாக குடிநீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறோம். இதுகுறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பொறியாளரிடம் கேட்டால், குடிநீர் வாரியத்திடம் கேளுங்கள் எங்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார். மேலும் குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் உள்ளதால் தான் குடிநீர் வழங்காமல் வாரியம் அலைக்கழித்து வருவதாக கூறுகின்றனர் என்கிறார்.இதுகுறித்து குடிநீர் வாரிய மண்டல அதிகாரியிடம் கூறியதாவது:வள்ளீஸ்வரன் தோட்டம் குடியிருப்பு மக்களுக்கு நேற்று கூட ஒன்பது லாரிகளில் குடிநீர் வழங்கி உள்ளோம். இக்குடியிருப்புக்கு என்று தனியே குழாய் அமைத்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இங்கு மூன்று பிளாக்குகள் உள்ளன. அவற்றில் பிரதான சம்ப்பில் குடிநீர் விழும் அவற்றை மற்ற மூன்று சம்ப்பிற்கும் பகிர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குடிநீரை முறையாக அங்குள்ளவர்கள் யாரும் பகீர்ந்து கொள்வதில்லை. மக்கள் பிரச்சனை செய்ததால், நிலுவையில் வைத்திருந்த, 20.8 லட்சம் ரூபாய் வரி பாக்கியை நகர்புற வாரியத்தினர் வழங்கி உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை