உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை கண்டித்து போரூரில் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை கண்டித்து போரூரில் ஆர்ப்பாட்டம்

போரூர், 'ஆன்லைன்' வாயிலாக மளிகை பொருட்கள் வினியோகம் செய்யும் நிறுவனங்களையும், அவற்றிற்கு குறைந்த விலையில் பொருட்களை விற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் கண்டித்து, போரூரில் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.நுகர்வோர் வினியோகஸ்தர்கள் நலவாழ்வு சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சாலை நடுவே தேங்காய் உடைத்து, சங்க உறுப்பினர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.சங்கத்தின் துணைத் தலைவர் ரவிசங்கரன் கூறியதாவது:நேரடி கடைகளுக்கு அதிக விலை வைத்தும், 'ஆன்லைன்' வர்த்தக தளங்களுக்கு குறைந்த விலையிலும், கார்ப்பரேட் நிறுவனங்கள், பொருட்களை விற்கின்றன.இதனால் பலர் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதால், கடைக்காரர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.சிறிய அளவில் துவங்கப்பட்ட கடைகள், எங்களை போன்ற வியாபாரிகளால் தான் பெரு நிறுவனங்களாக மாறியுள்ளன.நேரடி கடைகளுக்கு அதிக விலையும், ஆன்லைன் தளங்களுக்கு குறைந்த விலையும் விற்பதை தடுத்து, அதை அரசு முறைப்படுத்த தனி சட்டம் இயற்ற வேண்டும்.அதிகபட்ச விலை நிர்ணயம் செய்திருப்பதுபோல், குறைந்தபட்ச விலையையும் அரசு நிர்ணயிக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை