மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவர்களிடம் மொபைல் போன் வழிப்பறி
23-Mar-2025
ஆவடி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டையை சேர்ந்தவர் மணி, 28, இவர் ஆவடி அடுத்த கொடுவள்ளி, லட்சுமிநாதபுரத்தில் தங்கியுள்ளார். அங்குள்ள செங்கல் சூளையில் லாரி ஓட்டுநராக உள்ளார்.நேற்று முன்தினம் மாலை, மணியின் உறவினர் விஸ்வநாதன், 34 என்பவர் லாரியை பின்பக்கமாக இயக்கியுள்ளார். அப்போது, லாரியின் பின்புறம் நின்றிருந்த மணி மீது லாரி மோதியது. இதில், மணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மணி இறந்ததாக தெரிவித்தனர்.ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் உடலை மீட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
23-Mar-2025