பொழிச்சலுாரில் ரூ.9.84 கோடியில் மழைநீர் கால்வாய்
பல்லாவரம்,பல்லாவரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, பொழிச்சலுார் ஊராட்சி, 15 வார்டுகளை உடையது. இங்கு, 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மழைநீர் கால்வாய்கள் பழுதடைந்து, மணல் படிந்து கிடக்கின்றன.இதனால், ஒவ்வொரு மழையின் போதும், மழைநீர் செல்ல வழியின்றி சாலைகளில் தேங்கி, பகுதிவாசிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.அதனால், அனைத்து வார்டுகளிலும், பழைய கால்வாயை இடித்து புதிய கால்வாய் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழும சிறப்பு திட்டத்தின் கீழ், 9.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, இவ்வூராட்சியில், 15 வார்டுகளில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை, பல்லாவரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.