உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீர் வடிகால் வசதி பாலையா கார்டனில் தேவை

மழைநீர் வடிகால் வசதி பாலையா கார்டனில் தேவை

பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம் பகுதி, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, 11 ஆண்டுகள் மேலாகியும், அடிப்படை வசதிகளான குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. நீதிமன்ற உத்தரவுபடி, பாதாள சாக்கடை திட்டமும், குடிநீர் திட்டப் பணிகளும் நடந்து வருகின்றன.அதேபோல், மடிப்பாக்கம் பாலையா கார்டன், திலகர் அவென்யூ பகுதியில், மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பகுதிவாசிகள் கூறியதாவது:பாலையா கார்டன் நகரில் எட்டு தெருக்களும், திலகர் அவென்யூவில், 12 தெருக்களும் உள்ளன. இச்சாலையில், ஆரம்ப காலத்தில் இருந்தே மழைநீர் வடிகால் திட்டம் இல்லை.மழை பெய்தால், சாலையில் தண்ணீர் வழிந்தோடி, அருகில் உள்ள புழுதிவாக்கம் சித்தேரியில் சென்றடைகிறது.சில இடங்களில், வீட்டு முகப்பு, காலி இடங்களில் மழைநீர் தேங்கி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.எனவே, அனைத்து தெருக்களிலும் மழைநீர் வடிகால் வசதி கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.-- -நமது நிருபர்- -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்