உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வினாடி- -  வினா போட்டியை நடத்திய ராஜன் கண் மருத்துவமனை

வினாடி- -  வினா போட்டியை நடத்திய ராஜன் கண் மருத்துவமனை

சென்னை, தேசிய கணதான விழிப்புணர்வு தின விழாவையொட்டி, சென்னை ராஜன் கண் மருத்துவமனை, ரோட்டரி ராஜன் கண் வங்கி மற்றும் 'எக்ஸ் குவிஸ் இட்' அமைப்பு ஆகியவை இணைந்து, பள்ளி மாணவ - மாணவியருக்கு, வினாடி -- வினா போட்டியை நடத்தின. முதலில் ஆன்லைனில் நடந்த சுற்றில், 250க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அதில் தேர்வான, 30 மாணவ - மாணவியருக்கு, அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுகள், தி.நகர் ராஜன் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆறு பேர் இறுதி போட்டிக்கு தேர்வாகினர். இறுதிப்போட்டியில், மறைமலைநகர், சிவானந்த ராஜாராம் பள்ளி மாணவி நிர்விகானா பீதா, பி.எஸ்.பி.பி., மாணவன் அனிருத், வேலம்மாள் மாணவி ஸ்ரீநிதி ஆகி யோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தி.நகரில் நடந்த நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லுாரி செயலர் தியான கம்யானந்தா, தி.நகர், மெட்ராஸ் ரோட்டரி கிளப் தலைவர் டாக்டர் பிரவீன் தெள்ளாகுளா ஆகியோர் பரிசுகளை வழங்கினர். நிகழ்வில், ராஜன் கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் ராஜன் கூறியதாவது: தேசிய கண்தானம் விழாவையொட்டி, ஆக., 28 முதல் செப்., 5 வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். கண்தானம் குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு கிடையாது. நாட்டில், கருவிழியில் பாதித்தோர் அதிகம். இறந்த பின், கண்களை தானம் செய்தால் மட்டுமே, கண் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். உடல் உறுப்பு தானம் போல் கண்தானத்திலும் கவனம் செலுத்த வேண்டும். வரும் 7ம் தேதி, பெசன்ட் நகரில் விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், ராஜன் கண் வங்கி இயக்குநர் சுஜாதா மோகன், 'எக்ஸ் குவிஸ் இட்' அரவிந்த், மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி