மேலும் செய்திகள்
நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரிக்கை
01-Nov-2025
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு, மேயர் ராமநாதன் சாலையில் கூவம் கரையோர நடைபாதை ஆக்கிரமிப்புகள், நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன. இங்கு கடை நடத்தி குடியிருந்த 14 குடும்பங்களில், ஐந்து குடும்பங்களுக்கு, மாற்று வீடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அண்ணா நகர் மண்டலம், 108வது வார்டில், சேத்துப்பட்டு, மேயர் ராமநாதன் சாலை உள்ளது. கூவம் அருகில் உள்ள இச்சாலையில், நடைபாதையை கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள், தங்கள் குடும்பத்துடன் கடைகள் அமைத்து ஆக்கிரமித்திருந்தனர். இது குறித்து மாநகராட்சிக்கு பல முறை புகார் வந்துள்ளது. ஆய்வில், ஆந்திராவைச் சேர்ந்த ஒன்பது குடும்பங்களும், தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து குடும்பங்கள் என, மொத்தம் 14 குடும்பங்கள் இருப்பது தெரிந்தது. மாநகராட்சி அதிகாரிகள், ஆவணங்களை ஆய்வு செய்து, தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து குடும்பங்களுக்கு, பெரும்பாக்கம் வாரிய குடியிருப்பில் மாற்று வீடுகள் நேற்று வழங்கி, குடியமர ஏற்பாடு செய்தனர். பின், நேற்று சாலை முழுதும் ஆக்கிரமித்து கட்டிய கடைகள், தற்காலிக குடியிருப்பு மற்றும் கழிப்பறைகளை மாநகராட்சி அதிரடியாக அகற்றியது. தங்களிடமும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதால், மாற்று இடம் வழங்க வேண்டும் என, ஆந்திர குடும்பத்தினரும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
01-Nov-2025