உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் தடைக்கு காரணமான மரக்கிளைகள் அகற்றம்

மின் தடைக்கு காரணமான மரக்கிளைகள் அகற்றம்

முகலிவாக்கம், ஆலந்துார் மண்டலம், முகலிவாக்கம், சுபஸ்ரீ நகர், ஏ.ஜி.எஸ்., காலனி, கிருஷ்ணவேணி நகர் உள்ளிட்ட பகுதிகளில், சாலையோர மரங்கள் ஏராளம் உள்ளன. அவற்றின் கிளைகள், மின் கம்பிகள் செல்லும் வழித்தடத்தை மறித்தபடி உள்ளன.மின்கம்பிகளில் கிளைகள் உரசுவதால், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. மேலும், குறைந்த, உயரழுத்த மின் பிரச்னை ஏற்பட்டு, வீட்டு மின் சாதன பொருட்கள் சேதமடைந்தன.இது குறித்து, மின் வாரியத்திற்கும், மாநகராட்சிக்கும் பகுதிவாசிகள் தொடர்ந்து புகார் அளித்தனர். இதையடுத்து, முகலிவாக்கம் பகுதி நகர்களில் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை,  லிப்ட் இயந்திரம் உதவியுடன், வாரிய ஊழியர்கள் நேற்று அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை