உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  திருவொற்றியூர் - கிளாம்பாக்கம் நேரடி பஸ் சேவைக்கு கோரிக்கை

 திருவொற்றியூர் - கிளாம்பாக்கம் நேரடி பஸ் சேவைக்கு கோரிக்கை

திருவொற்றியூர்: வடசென்னை பயணியர் பயன்பெறும் வகையில், திருவொற்றியூரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு நேரடி மாநகர பேருந்து சேவை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. திருவொற்றியூர் பேருந்து நிலையத்தில் இருந்து, வள்ளலார் நகர், பிராட்வே, எழும்பூர், திருவேற்காடு, கோயம்பேடு, பூந்தமல்லி உள்ளிட்ட வழித்தடங்களில், பேருந்து சேவைகள் உள்ளன. தவிர, தென் மாவட்டங்களுக்கான ஒரு சில பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சென்னையின் பிரதான பேருந்து நிலையமாக, கிளாம்பாக்கம் மாற்றப்பட்டு விட்டதால், வடசென்னை மக்கள் நேரடி பேருந்து சேவையின்றி, மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன்படி, திருவொற்றியூரில் இருந்து கோயம்பேடிற்கும், அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கும் என, இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கும் மேல் பயணித்து, வெளியூர் பேருந்து நிலையம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், முதியோர், பெண்கள் உள்ளிட்டோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட வடசென்னை மக்கள் பயன்பெறும் வகையில், திருவொற்றியூரில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு, நேரடி மாநகர பேருந்து சேவை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி