உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சூளைமேடில் வடிகால்வாய் பணி விரைந்து முடிக்க கோரிக்கை

சூளைமேடில் வடிகால்வாய் பணி விரைந்து முடிக்க கோரிக்கை

சூளைமேடு: போக்குவரத்து நெரிசலான சூளைமேடு, அண்ணா நெடும்பாதையில் நடந்து வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க, பகுதிமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அண்ணா நகர் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்தை இணைக்கும் பகுதியாக, சூளைமேடு உள்ளது. இப்பகுதியில், போக்குவரத்து நெரிசலான அண்ணா நெடும்பாதையில், சில நாட்களாக மழைநீர் வடிகால்வாய் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: அண்ணா நெடும்பாதையில் காய்கறி சந்தை செயல்படுகிறது. இப்பிரதான சாலையை கடந்து தான், சூளைமேடு, கில் நகர், எம்.எம்.டி.ஏ., காலனி, அமைந்தகரை, அரும்பாக்கம், நெல்சன் மாணிக்கம் சாலை உள்ளிட்ட இடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இப்பகுதியானது, ஒவ்வொரு மழையிலும் பாதிக்கப்படும் பகுதியாக அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு, மந்தமாக நடக்கும் வடிகால்வாய் பணிகளால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. மந்தகதியில் நடக்கும் பணிகளால், இந்தாண்டும் சூளைமேடில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்படும். மழைக்கு முன், பணிகளை விரைவாக முடித்து, புதிய சாலை அமைக்க நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை