உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடி வழக்கு விரைவு நீதிமன்றம் அமைக்க கோரிக்கை

 மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடி வழக்கு விரைவு நீதிமன்றம் அமைக்க கோரிக்கை

சென்னை: மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், விரைவு நீதிமன்றம் அமைத்து வழக்கை விரைந்து முடிக்கக்கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக, நிதி நிறுவன தலைவர் தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் முழுமையான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். விரைவு நீதிமன்றம் அமைத்து வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி, முதலீட்டாளர்கள் நேற்று, மயிலாப்பூர் சித்திரை குளம் அருகே, ஆர்ப்பாட்டம் நடத்தினர். மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் தலைமையில் நடந்த போராட்டத்தில், 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். நிதிநிறுவன கணக்குகளை தடயவியல் தணிக்கை செய்ய வேண்டும். குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து, அதன் வாயிலாக முதலீட்டாளர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் எனவும், கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை