உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நள்ளிரவில் எரிந்த பெருங்குடி குப்பை கிடங்கு மூச்சுத்திணறலால் குடியிருப்புவாசிகள் பாதிப்பு

நள்ளிரவில் எரிந்த பெருங்குடி குப்பை கிடங்கு மூச்சுத்திணறலால் குடியிருப்புவாசிகள் பாதிப்பு

பெருங்குடி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் சேகரமாகும் குப்பை, லாரிகளில் எடுத்து வந்து பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், திடீரென குப்பை கிடங்கில் தீப்பற்றி, தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.இதனால், குப்பை கிடங்கை சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் வேளச்சேரி பிரதான சாலை, குரோம்பேட்டை- - துரைப்பாக்கம் ரேடியல் சாலைகளில் புகை மண்டலம் சூழ்ந்தது.அதனால், குடியிருப்புவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலில் அவதிப்பட்டனர். பின், அப்பகுதிவாசிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததனர்.வேளச்சேரி, கோட்டூர்புரம், திருவான்மியூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், தாம்பரம், அசோக் நகர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து, ஆறு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், 14 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.சம்பவம் குறித்து, பள்ளிகரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை