ரோட்டரி தடகளம் 1,500 பேர் பங்கேற்பு
சென்னை:ரோட்டரி சர்வதேச மாவட்டம் சார்பில், 'ரோட்டரி ஒலிம்பியாட் - 2025' எனும் பெயரில், தடகளப் போட்டிகள், பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில் நடந்தன. சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, 70க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த, 1,500 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இருபாலருக்கும், 50, 100, 200 மீட்டரில் ஓட்டப் பந்தயம், ரிலே, குண்டு எறிதல், வட்டு எறிதல் உட்பட பல வகையான போட்டிகள், வயது வாரியாக நடத்தப்பட்டன. த க் ஷி ன் பாரத்தின் ஜெனரல் கமெண்டிங் அதிகாரி கரன்பீர் சிங் பிரார், ரோட்டரி ஆளுநர் வினோத் சரோஜ் ஆகியோர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.