உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கல்லுாரி மாணவரை கடத்திய ரவுடிகள் கைது

கல்லுாரி மாணவரை கடத்திய ரவுடிகள் கைது

கொளத்துார், மாதவரம், தணிகாசலம் நகரைச் சேர்ந்தவர் உமா பிரகாஷ், 19; கல்லுாரி மாணவர். இவர், ஜி.கே.எம்., காலனியில் உள்ள சூப் கடை ஒன்றில், பகுதி நேரமாக பணிபுரிந்தார்.அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்த கார்த்திக் உள்ளிட்ட இருவர், சூப் குடித்து விட்டு பணம் தராமல் சென்று வந்துள்ளனர். இது குறித்து, உமா பிரகாஷ் கார்த்திக்கிடம் தட்டிக் கேட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 23ம் தேதி பிற்பகல் 3:30 மணியளவில், கல்லுாரி முடித்து விட்டு கடைக்கு யமஹா பைக்கில் உமா பிரகாஷ் வந்து கொண்டிருந்தார். அப்போது, கார்த்தி உள்ளிட்ட சிலர், மூன்று பைக்குகளில் வந்து அவரது வண்டியை மறித்து, அவரை பைக்கிலேயே கடத்திச் சென்று தாக்கியுள்ளனர்.பின், அடுத்த நாள் அதிகாலை 1:00 மணியளவில் ஜி.கே.எம்., காலனியில் இறக்கி விட்டுள்ளனர். காயமடைந்த உமா பிரகாஷ் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரின்படி, பெரவள்ளூரைச் சேர்ந்த கார்த்திக், 22, மற்றும் கொளத்துாரைச் சேர்ந்த அஜய் என்கிற லாசர், 24, ஆகியோரை, கொளத்துார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி