வியாசர்பாடியில் ரவுடி வெட்டிக்கொலை
வியாசர்பாடி:சென்னை, மணலி, சின்னசேக்காடு, வேதாச்சலம் தெருவை சேர்ந்தவர் ராஜ், 40; ஆட்டோ டிரைவர். இவர் எம்.கே.பி.நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். ரவுடியான இவர் மீது, கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஜனவரி 25ம் தேதி, எம்.கே.பி.நகர் போலீசாரால் ஒரு வழக்கு தொடர்பாக ராஜ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு முன் ஜாமினில் வந்துள்ளார்.நேற்று ஈஸ்டர் பண்டிகையொட்டி ராஜ் வியாசர்பாடி, எஸ்.எம்.நகர் மெயின் ரோட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு மாலை நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர்.இதில் படுகாயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆட்டோவில் ஏற்றி, சென்னை ஸ்டான்லி மருத்துவனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.வியாசர்பாடி போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.