13 பள்ளிகளை மேம்படுத்த ரூ.4.23 கோடி ஒதுக்கீடு
வளசரவாக்கம்வளசரவாக்கம் மண்டலத்தில் 143 முதல் 155 வரை 13 வார்டுகள் உள்ளன. இதில், ஏழு மேல்நிலை, ஆறு நடுநிலை, எட்டு தொடக்கம் என, மொத்தம் 21 அரசு பள்ளிகளும், ஆறு அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இதில், மாவட்ட கல்வி துறையிடம் இருந்த 13 பள்ளிகள், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன. இப்பள்ளிகளில் 4.23 கோடி ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள், சுற்றுச்சுவர், கழிப்பறை மற்றம் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.